- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலியை விட இவரே பெஸ்ட் பேட்ஸ்மேன். இவர் பக்கத்துல யாரும் நிக்க முடியாது – பேட்டிங் பயிற்சியாளர் கருத்து

இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராக இருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கும் அவர் தொடக்க வீரராக மாற்றப்பட்டார். 2013ல் இருந்து இவரது கிரிக்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது. தற்போது வரை அவரது அதிரடி ஆட்டத்தின் மூலமாக 3 இரட்டை சதங்களும் டி20 போட்டிகளில் 4 சதங்களும் விளாசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 38 ஆக இருந்த அவரது சராசரி கடந்த 7 வருடங்களில் 49 ஆக மாறி இருக்கிறது. தொடர்ந்து கையில் கிடைக்கும் அணிகளை எல்லாம் அடித்து துவம்சம் செய்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் ஆறு சதங்கள் விளாசியுள்ளார். இதில் 5 சதங்கள் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து மட்டுமே வந்தது.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியை துவம்சம் செய்து சாதனைகளை படைத்து வருகிறார் ரோகித் சர்மா. கிட்டத்தட்ட விராட் கோலிக்கு நிகரான வீரர் என்றும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறமை குறித்து பேசியுள்ளார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் . இதுகுறித்து அவர் கூறுகையில்…

துரதிஸ்டவசமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ரோகித் சர்மா காயம் அடைந்துவிட்டார். டெஸ்ட் தொடரில் அவரை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களை அனாசயமாக அடிப்பதில் வல்லவர். எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் சிகிச்சை அடிப்பதில் கில்லாடி.

- Advertisement -

அவரது வலிமை என்னவோ அதை மட்டும் தான் பயன்படுத்துகிறார். தேவையில்லாத ஷாட்கள் எப்போதும் ஆட மாட்டார். அவரது நாளில் அவர் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் .மற்றவர்கள் யாரும் பக்கத்தில் கூட நிக்கமுடியாது. அந்த அளவிற்கு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். உலகின் மிகச்சிறந்த வீரர் இவர்தான் என்று கூறியுள்ளார் விக்ரம் ரத்தோர்.

தற்போது வரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2541 ரன்களும், 224 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9115 ரன்களும், 108 டி20 போட்டிகளில் ஆடி 2773 ரன்கள் குவித்துள்ளார். இதில் 39 சதங்களும் 74 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -
Published by