இவர்தான் உண்மையான “டீம் மேன்” 37 வயது சீனியர் வீரரை பாராட்டிய – பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

Rathour
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இந்திய அணி 234 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்த நிலையில் கடைசி நாள் போட்டி முடிவடைந்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Saha

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹாவை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மிகவும் பாராட்டி உள்ளார்.

- Advertisement -

ஏனெனில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிக்கலான ஒரு சூழ்நிலையில் இருந்த போது தனது கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல் விளையாட வந்த சாஹா, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் குவித்தார். இந்நிலையில் அவரது இந்த ஆட்டத்தை பாராட்டிய விக்ரம் ரத்தோர் கூறுகையில் :

saha 1

கடும் கழுத்து வலியால் அவதிப்பட்ட அவர் இந்திய அணியின் நிலையைக் கருதி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்தார். அவரது இந்த அர்ப்பணிப்பு அவர் ஒரு முழு டீம்மேன் என்பதை காண்பிக்கிறது. மேலும் இரண்டு வீரர்களுடன் இணைந்து அவர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்திய அணியை சிக்கலான நிலையில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தது. இப்போது மட்டுமின்றி எப்போதுமே இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : போட்டி முடிந்ததும் மைதான பராமரிப்பாளர்களுக்கு 35000 ரூபாய் வழங்கிய ராகுல் டிராவிட் – எதற்கு தெரியுமா?

எப்போதெல்லாம் எந்த வகையில் உதவும் முடியுமோ அந்த வகையில் உதவி செய்து கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் நம்பர் ஒன் கீப்பராக டெஸ்ட் அணியில் இருந்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் தன்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என விக்ரம் ரத்தோர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement