போட்டி முடிந்ததும் மைதான பராமரிப்பாளர்களுக்கு 35000 ரூபாய் வழங்கிய ராகுல் டிராவிட் – எதற்கு தெரியுமா?

dravid
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு அடுத்து டிராவிட் பதவி ஏற்ற நாளில் இருந்தே அவர் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் தனது பணியை துவங்கிய அவர் தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பயிற்சியாளர் பதவியை திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

dravid 1

கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில் போட்டியின் இறுதி நாளான இன்று இரு அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தின் மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் 35000 ரூபாய் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் எதற்கு அந்த பணத்தை கொடுத்தார் என்றால் :

rachin 1

போட்டி இறுதி நாள்வரை சுவாரசியம் குறையாமல் நடைபெறும்படி மைதானத்தை தயார் படுத்தியது மட்டுமின்றி ஒவ்வொரு நாள் ஆட்டத்திற்கு பின்பும் அதை சரியான முறையில் மைதான ஊழியர்கள் பராமரித்ததன் காரணமாகவும் அவர்களின் பணியை பாராட்டி டிராவிட் அந்த தொகையை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவில் முடிந்த முதல் போட்டி. இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய அறிமுக வீரர் – விவரம் இதோ

டிராவிட் செய்த இந்த செயலை ஒரு பாராட்டாக நினைத்து இனி எப்போது இங்கு டெஸ்ட் போட்டி நடைபெற்றாலும் தரமான மைதானத்தை கொடுப்போம் என்று அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement