டிராவில் முடிந்த முதல் போட்டி. இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய அறிமுக வீரர் – விவரம் இதோ

Rachin
- Advertisement -

கான்பூரில் கடந்த 25-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை நெருங்கி இன்று கடைசி நாளில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிவடைந்தது. நியூசிலாந்து அணிக்கு 284 ரன்களை நிர்ணயித்த இந்திய அணியானது 98 ஓவர்கள் பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்த போட்டி டிராவில் முடித்தது.

axar

- Advertisement -

போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களே சிறிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் போட்டி மிக சுவாரசியமாக அமைந்தது. குறிப்பாக கடைசி நாளான இன்று முதல் செசனில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனாலும் இடையில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக அக்சர் பட்டேல் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வீழ்த்த முடியாமல் டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான ரச்சின் ரவீந்திரா திகழ்ந்தார்.

rachin 1

ஏனெனில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் கடைசி விக்கெட் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் விழுந்து விடும் என்றும் இந்திய அணி வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜஸ் படேல் 52 பந்துகளை சந்தித்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இருவரது சிறப்பான தடுப்பு ஆட்டம் காரணமாகவும் நியூசிலாந்து அணி போட்டியை டிரா செய்தது.

- Advertisement -

இதையும் படிங்க : சொன்னபடியே 20 கோடி கொடுத்து கே.எல் ராகுலை வாங்க துடிக்கும் ஐ.பி.எல் அணி – விவரம் இதோ

அதிலும் குறிப்பாக அறிமுக வீரரான ரச்சின் ரவீந்திரா 91 பந்துகளை நேர்த்தியாக சந்தித்து நியூசிலாந்து அணியை டிராவிற்கு அழைத்துச் சென்றார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு எதிராக விளையாடி போட்டியை டிராவில் முடித்தது பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement