விராட் கோலி செய்யும் இந்த தவறை திருத்திக்கொண்டால் போதும் – பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஓபன்டாக்

Rathour
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சதங்களை விளாசுவதை வழக்கமாக வைத்திருந்தவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்காமல் விளையாடி வருவது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்க தொடரிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியிலும் அவரது மோசமான ஆட்டம் தொடர்கிறது. முதல் இன்னிங்சில் 35 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடி கொண்டிருக்கும்போது ஆட்டமிழந்தார்.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சின் போதும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி விராட் கோலி அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே நிலைத்து நின்று விட்டால் பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் கோலி இப்போதெல்லாம் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறுகிறார்.

இந்நிலையில் விராட் கோலியின் விக்கெட்டுகள் ஒரே மாதிரிதான் விழுகிறது என்றும் அதனை அவர் திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு தற்போது ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளை கவர் டிரைவ் ஆடும்போது பிரச்சனை இருக்கிறது.

ஆனால் இதே ஷாட் மூலமாகத்தான் அவர் பல பல ரன்களை குவித்துள்ளார். அதனால் அவர் அந்த ஷாட்டுகளை விளையாடுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதற்கு ஏற்ற சரியான பந்தினை தேர்வு செய்து விளையாட வேண்டும். சமீபத்தில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை கவர் டிரைவ் அடிக்க ஆசைப்பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆகி எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத தனித்துவமான சாதனையை படைத்த பும்ரா – விவரம் இதோ

ஆனால் அதனை அவர் கருத்தில் கொள்ளாமல் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அதே ஷாட்டை ஆட வேண்டும். மேலும் போதுமான பயிற்சி செய்து அந்த பந்துகளை கணித்தால் போதும் அந்த பிரச்சனை நீங்கிவிடும் என்று அவருக்கு அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement