ஒரு ரசிகராகவும் நண்பனாகவும் உன் நினைவோடு நான் இருப்பேன் – ரெய்னாவிற்காக மனமுறுகிய தமிழ் நடிகர்

Raina

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக சில நிமிடங்களிலேயே சின்ன தல ரெய்னாவும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர்கள் இருவரின் அடுத்தடுத்த ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Raina

இவர்கள் இருவரது ஓய்வு அறிவிப்பையும் பாராட்டி கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் விக்ரம் பிரபு தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் தோனி மற்றும் ரெய்னா ஆகியோரின் ஓய்வு குறித்து தமிழ் நடிகரான விக்ரம் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவினை இட்டுள்ளனர். அதில் விக்ரம் பிரபு பதிவிட்டதாவது : “தோனி நீங்கள் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்” எந்தவொரு சவாலையும் ஏற்றுகொண்டு திட்டமிட்டு செயல்படுவீர்கள். இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்த நீங்கள் ஒரு தன்னலமற்றவர் என்று தோனி குறித்து பதிவிட்டுள்ளார்.

அடுத்த பதிவில் சுரேஷ் ரெய்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் ” உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”. களத்தில் மட்டுமல்ல வெளியிலும் ஒரு மாணிக்கம். நீங்கள் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். ஒரு ரசிகராக மட்டுமின்றி உங்களது நண்பராகவும் உன் நினைவோடு இருப்பேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் தோனி குறித்தும் ரெய்னா குறித்தும் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.