பொறுமையை இழந்து நானே சென்று மனீஷ் பாண்டேவிடம் இதனை கேட்டேன் – விஜய் ஷங்கர் பகிர்ந்த ரகசியம்

Shankar-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

srhvsrr

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

SRH

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய விஜய் சங்கர் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் தன்மையை அறிந்து சிறப்பாக விளையாடினோம். சூழ்நிலைக்கேற்றவாறு விளையாடிய போதிலும் ஒரு கட்டத்தில் நான் மனிஷ் பாண்டேவிடம் சென்று நான் பெரிய ஷாட்டுகளை விளையாட வா ?என்று கேட்டேன். ஏனெனில் மணிஷ் பாண்டே மட்டும் பிரஷர் சுச்சுவேஷன்-இல் அதிரடியாக விளையாட விடுவது தவறு.

Shankar

அதனால் சரியான நேரத்தில் நானும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எங்களது இருவரது கம்யூனிகேஷன் சிறப்பாக இருந்தது. அதனால் எங்களது பார்ட்னர்ஷிப் பெரிய அளவில் வந்தது மகிழ்ச்சி. போட்டியை இறுதி வரை எடுத்துச் சென்று வெற்றி பெற முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம் அதன்படி வெற்றியும் கிடைத்தது என்று விஜய் சங்கர் கூறினார்.

Advertisement