ஹர்திக் பாண்டியாவுடன் தன்னை ஓப்பிடாதிர்கள் – தமிழக வீரர் அதிரடி

pandiya
- Advertisement -

இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள விஜய் சங்கரை சிலர் ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு பேசிவருகின்றனர். இந்நிலையில் தமிழக வீரர் விஜய்சங்கர் ஹர்திக் பாண்டியாவுடன் தன்னை ஒப்பிட வேண்டாமென்றும் அவரது திறமைகள் வேறு என்றும் தற்போது கூறியுள்ளார்.
vijayshankar

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.இந்நிலையில் நேற்று இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

புதுமுகவீரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்றதன் பின்னர் பேசிய விஜய்சங்கர் ‘‘என்னைப்  பொறுத்த வரையில் கிரிக்கெட்டில் தினம் தினம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான இலக்கு.சிலர் என்னை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதால் சிக்கல் தான் உண்டாகும் என்றார்.

Advertisement