இந்திய அணிக்காக நீங்க மீண்டும் விளையடா முடியாது ரசிகர்கள் விமர்சனம் – விஜய் ஷங்கர் அளித்த பதில்

Vijay-Shankar
- Advertisement -

கடந்த 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்திய அணி தேர்வில் பலவிதமான சர்ச்சைகள் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்திய வீரரான அம்பத்தி ராயுடுவிற்க்கு பதில் தமிழக வீரரான விஜய் சங்கரை 4 ஆவது இடத்திற்கு தேர்வு செய்தது தான். கடந்த உலகக் கோப்பைக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக அமையாத காரணத்தால், இந்திய அணி பல தொடர்களில் மிடில் ஆர்டரில் சொதப்பியது. இந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினர். கடைசியாக மிடில் ஆர்டரில் விளையாட அம்பத்தி ராயுடு சரியாக இருப்பார் என்று பல முன்னணி வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.

Vijay Shankar

- Advertisement -

ஆனால் இந்திய தேர்வு குழு அந்த வாய்ப்பினை விஜய் சங்கருக்கு வழங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் விஜய் சங்கரின் தேர்வை விமர்சித்து வந்தனர். இதற்கு பதில் கூறும் விதமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் அம்பத்தி ராயுடு ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிறப்பாக செயல்படுவார் ஆனால் விஜய் சங்கரோ பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று விதமான திறமைகளும் வெளிப்படுத்துவார் எனவே அவரை தேர்வு செய்தோம் என்று அறிக்கையை வெளியிட்டது.

இதைக் கிண்டல் செய்யும் விதமாக அம்பத்தி ராயுடு தான் இன்டர்நெட்டில் இரண்டு 3D கிளாசஸ் ஆர்டர் செய்து இருப்பதாக ட்வீட் செய்தார். ஆனால் விஜய் சங்கரோ கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். அதற்க்குப் பிறகு அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டார். இதற்கிடையில் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர் காயம் காரணமாக தொடரின் பாதியில் இருந்து விலகினார். இப்போது ஐபிஎல் சீசன் 14 தொடங்கியிருக்கிறது.

Shankar-1

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் விஜய் சங்கர் 7 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும், ஒரு ஓவர் பந்துவீசி 14 ரன்களை விட்டுக்கொடுத்தார். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டாலும் காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட இயலவில்லை. ஆனால் இந்த சீசனில் காயங்கள் ஏதும் இல்லாதபோதும் அவரால் சரியாக ஃபர்பாமன்ஸ் செய்ய இயலவில்லை. இப்படி விளையாடினால் மறுபடியும் இந்திய அணிக்கு தேர்வாவது கேள்விகுறி தான் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

shankar

இதைப்பற்றி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த விஜய் சங்கர் தான் ஒருபோதும் இந்திய அணிக்கு தேர்வாவதை நினைத்து விளையாடவில்லை எனவும் அதை நினைத்து விளையாடினால் அதிகமாக உழைக்க வேண்டி வரும் அதனால் மன அழுத்தம் வரும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர், கிரிக்கட்டை நான் ரசித்து ஆடுகிறேன், மன நிறைவிற்க்காக விளையாடுகிறேன், எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் வாய்ப்புகளுக்காக உழைத்து மன உளைச்சலுக்கு தான் ஆளாக விரும்பவில்லை எனவும் கூறினார்.

Advertisement