தமிழ் சினிமாவில் எனது சூப்பர்ஸ்டார் இவர்தான். பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவீட்டிய – விஜய் ஷங்கர்

Shankar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் சென்ற ஆண்டு அறிமுகமானவர் தமிழக வீரரான விஜய் ஷங்கர். இவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஆவார். பாண்டியா காயமடைந்தபோது அவருக்கு மாற்று வீரராக விஜய் சங்கர் இந்திய அணியில் தேர்வானார். இந்நிலையில் விஜய் சங்கர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Vijay Shankar

- Advertisement -

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது கூட விஜய் சங்கரின் செயல்பாடு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். இதுவரை பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யாமல் இருந்தாலும் இவரது திறமை காரணமாக இவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

விஜய் சங்கர் தமிழ் சினிமாவின் நடிகரான விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் ஆவார். ஆகையால் விஜய்சேதுபதியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இதோ அந்த ட்விட் :

புகைப்படத்தை பதிவிட்ட விஜய் சங்கர் மக்கள் செல்வனை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

Advertisement