Vijay Shankar : உலககோப்பை தொடர் முழுதிலும் இருந்து வெளியேறிய விஜய் ஷங்கர் – காரணம் இதுதான்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது

Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Vijay-Shankar

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பெற்றிருந்தார். துவக்கத்தில் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இடையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் ராகுல் துவக்க ஆட்டக்காரராகவும், விஜய்சங்கர் 4-வது வீரராக அணியில் இடம் பிடித்தார்கள்.

விஜய் ஷங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். அதே சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அடுத்தடுத்த ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்ய விஜய் சங்கர் தவறினார். 3 போட்டிகளில் சேர்த்து 58 ரன்கள் மட்டுமே குவித்து பேட்டிங்கில் சொதப்பினார் விஜய் சங்கர்.

Vijay Shankar

தொடர் சொதப்பல்கள் காரணமாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கருக்கு பதிலாக பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். நேற்றைய போட்டியில் காயம் காரணமாக விஜய் சங்கர் அணியில் விளையாட வில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Shankar 1

இந்நிலையில் அவர் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று இந்திய அணியின் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement