விஜய் ஷங்கர் செய்த 2 தவறுகள். போட்டியையே தோல்விக்கு கொண்டு சென்ற பரிதாபம் – இதை நோட் பண்ணீங்களா ?

shankar 1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது லீக் மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் அதிக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது அந்த அணியின் கைரன் பொல்லார்ட் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

chahar

முதல் இன்னிங்சில் கலீல் அஹமத் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் மிக் விக்கெட் திசையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட பொல்லார்ட் தந்த எளிமையான கேட்சை கோட்டை விட்டார் தமிழக வீரரான விஜய் சங்கர். அதற்குப் பிறகு 20 வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளை சிக்சருக்கு விளாசினார் பொல்லார்ட்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கடைசி 2 பந்துகளில் இரண்டு சிக்சர்களை பொல்லார்ட் அடித்தார். இந்த சிக்ஸர்களால்தான் 150 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை மும்பை அணியால் எட்ட முடிந்தது. பொல்லார்ட் அந்த இரண்டு சிக்சர்கள் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

Shankar

ஹைதராபாத் அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார் விஜய் சங்கர். ஆனால் இந்த போட்டியில் அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது ஆனால் முக்கியமான நேரத்தில் பொல்லார்டின் கேட்சை கோட்டைவிட்டு அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளார். இதனால் அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

shankar

அதேவேளையில் பேட்டிங்கின் போது விஜய் ஷங்கர் 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்த நிலையில் இலக்கை நோக்கி கொண்டு சென்று வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 25 பந்துகளில் 28 ரன்களை எடுத்தாலும் அடிக்க வேண்டிய நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement