நிதாஸ் டிராபியில் சொதப்பிய பிறகு..! குறுகிய காலத்தில் பார்ம்க்கு திரும்பினேன் ..! – விஜய் ஷங்கர் மகிழ்ச்சி..!

shankar
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், விஜய் ஷங்கர் அகியோர்களை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினர். அதிலும் குறிப்பாக டெல்லி அணியில் விளையாடிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் கொஞ்சம் செலெக்ஷன் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்தார்.
Vijay

தற்போது இவர் இந்திய அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சயில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வீரரான ஷங்கர் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அந்த போட்டிகள் சரியக ஜொலிக்க முடியாத இவருக்கு பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ஷங்கர், தன்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக சென்னை அணியுடனான லீக் போட்டி ஒன்றில் 31 பந்துகளில் 54 ரன்களை அடித்தது இவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியில் டெல்லி தோல்வியடையுந்த போதும் இவரது ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது.
vijayshankar

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனது செயல்திறனை மேலும் மெருகேற்றிக்கொள்ள ரோபோ வீசும் பந்துகளை எதிர்த்து விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்த ரோபோ பந்து வீச்சு அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதிக செயல்திறன் கொண்ட ரோபோ ஒன்று மணிக்கு 145 கி மீ வேகத்தில் வந்து வீசக்கூடியது. அது குறிப்பிட்ட இடத்தில பந்தை துல்லியமாக வீசும் ஆற்றலை கொண்டது.

இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இந்த இளம் வீரர், இடுப்பிற்கு மேல் எழும் பந்துகளை ஆட தான் தனக்கு கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் இந்த அதிரடி இளம் வீரர் விரைவில் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்பலாம்.

Advertisement