ட்விட்டரில் குவியும் பாராட்டு.! இந்திய ரசிகர்களுக்கு இவர் குடுத்த அதிர்ச்சி..!

murali
- Advertisement -

இன்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முரளி விஜய் இன்று அடித்த சததிற்கு ட்விட்டரில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

muralivijay

- Advertisement -

கடந்த சில காலமாக முரளி விஜய் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். இவரது மோசமான ஆட்டத்தால் இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. மேலும், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இடம்பெற்ற விஜய்க்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளிக்கபட்டது. நீண்ட கலமாகவே இவர் ஒரு குறைவாக மதிப்பிடபட்ட வீரராகவே இந்திய அணியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் தவானுடன் களமிறங்கிய முரளி விஜய் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.ஒரு பக்கத்தில் தவான் அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 107 ரன்களை எடுத்து அட்டமிழக்க. அவரை தொடர்ந்து விளையாடிய விஜய் 153 பந்துகளில் 105 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 12 வது சததத்தை பூர்த்தி செய்தார் முரளி விஜய்.

muralivijay

தொடர்ந்து பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொண்டு வந்த முரளி விஜய், இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்து தான் இன்னும் ஒரு சிறந்த வீரராக உள்ளேன் என்று நிரூபித்துள்ளார். முரளி விஜயின் இந்த அதிரடியான கம் பேக்கிற்கு ட்விட்டரில் பல்வேறு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement