டாப் பார்ம்ல இருக்கும் அவங்க 2 பேரை ஒதுக்கிட்டு கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு – வெங்கடேஷ் பிரசாத் விளாசல்

Venkatesh-Prasad
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

நாக்பூர் மைதானத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. ஆனாலும் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தவித்து வரும் கே.எல் ராகுலுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு வழங்கியது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கே.எல் ராகுலை கடுமையாக விளாசி உள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : கே எல் ராகுலிடம் பேட்டிங் திறமை மற்றும் டேலண்ட் ஆகியவை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

ஏனெனில் 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராகுல் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும் 34 ரன்கள் தான் சராசரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் இவரை போன்று ஒரு சுமாரான ரன்களை குவிக்கும் வீரருக்கு இவ்வளவு வாய்ப்பினை யாரும் தந்ததில்லை. இதிலிருந்து அணியில் பேவரிசம் இருக்கிறது என்று தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு கருத்தினை பதிவிட்டிருந்த வெங்கடேஷ் பிரசாத் அதில் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

இந்திய அணியில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் டாப் ஃபார்மில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சுப்மன் கில் மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அதேபோன்று உள்ளூர் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் சதங்களாக அடித்து விளாசிக் கொண்டிருக்கிறார். இப்படி டாப் ஃபார்மில் இருக்கும் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருவதை விடுத்து ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலியா இந்த முதல் போட்டியில் தோற்க இதுவே காரணம் – சுட்டிக்காட்டிய மார்க் வாக்

திறமையான வீரர்கள் வெளியில் இருக்கும்போது இப்படி தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பினை வழங்கிருக்கக் கூடாது என்று கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். வெங்கடேஷ் பிரசாத்தின் இந்த கருத்தினை கண்ட ரசிகர்களும் அவரது இந்த கருத்தை ஆதரித்து ராகுலை வெளியே அனுப்பி உள்ளூர் போட்டிகளில் தனது திறனை நிரூபித்த பிறகு அணியில் சேர்க்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement