பெங்களூரு அணியின் இளம்வீரரான இவரே அடுத்த யுவராஜ் சிங் – வெங்கடேஷ் பிரசாத் கணிப்பு

venkatesh-prasad
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத வகையில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், தங்கராசு நடராஜன், வருண் சக்கரவர்த்தி, முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக இருப்பவர் தேவ்தத் படிக்கல் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

வழக்கத்தை விட சற்று உயரமாக இருக்கும் இவர் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். தற்போது வரை 14 போட்டிகளில் விளையாடி 475 ரன்கள் குவித்திருக்கிறார். எந்த ஒரு இளம் வீரரும் தனது முதல் ஐபிஎல் தொடரில் இத்தனை ரன்கள் அடித்தது இல்லை. இதுகுறித்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…

மிக முக்கியமான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அனைத்து விதமான சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் கையாண்டு கொள்கிறார். ஒரு வீரரின் முழு திறமை என்பது எந்த நிலையிலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனை காண்பித்து விட்டார் இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

Padikkal 1

இந்தியாவின் மிக முக்கிய வீரராக அதிக வாய்ப்பு இருக்கிறது. இவரைப் பார்க்கும்போது எனக்கு இவர் யுவராஜ் சிங் ஞாபகம் வருகிறார் என்று தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஏற்கனவே விஜய் ஹசாரே சையது முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் போட்டிகளில் பட்டையை கிளப்பி விட்டு தற்போது ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருக்கிறார். இந்தியாவின் துவக்க வீரராக வரை இவருக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.

Advertisement