அடேங்கப்பா தோனி வீட்டில் இத்தனை பைக்குகளா? வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட வீடியோ – தோனி சொன்ன அந்த பதில்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி எவ்வளவு பெரிய பைக் பிரியர் என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஏகப்பட்ட பைக் கலெக்ஷனை வைத்திருக்கும் அவர் அதனை சரியாகவும் பராமரித்தும் வருகிறார். தோனியின் வீட்டில் ஏகப்பட்ட பைக்குகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இருந்தாலும் அவர் அங்கு எத்தனை பைக்குகளை வைத்திருக்கிறார்? அங்கு எப்படி அதை பராமரிக்கிறார்? என்பது குறித்த வீடியோ எதுவும் இதுவரை வெளியானது இல்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் பிரசாத் அவருடைய நண்பருடன் தோனி வீட்டிற்கு தற்போது சென்று இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தோனியின் வீட்டில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பைக் கலெக்ஷன்களை வீடியோவாக எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தோனியின் பைக் ஷெட்டில் 100-க்கும் மேற்பட்ட பைக்குகளும் பல்வேறு அரிதான கார்களும் நிற்கும் காட்சியை பார்க்க முடிகிறது.

- Advertisement -

தோனி வீட்டில் பிரத்தேயகமாக இருக்கும் அந்த பைக் ஷெட்டில் இருந்து வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது : நான் பார்த்ததிலேயே இப்படி ஒரு விமர்சையான ரசனையுடன் இவ்வளவு கலெக்ஷனை வைத்திருக்கும் ஒரு நபர் இவர்தான். அவருடைய வீட்டில் நிற்கவைக்கப்பட்டு இருக்கும் கார் மற்றும் பைக்குகள் இவைதான் என அந்த வீடியோவை வெங்கடேஷ் பிரசாத் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தோனியின் மனைவி சாக்ஷி ராஞ்சிக்கு முதல் முறை வருகிறீர்களா? என்று வெங்கடேஷ் பிரசாத்திடம் கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்கையில் : நான் இங்கு வருவது முதல் முறை அல்ல. இது நான்காவது முறை என்று பதில் அளிக்கிறார். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான சுனில் ஜோஷி நானும் இங்கு நான்காவது முறை வருகிறேன். ஆனால் தோனி போன்ற ஒரு லெஜெண்டுடன் அவரது வீட்டில் இருப்பது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்.

- Advertisement -

அதன் பிறகு சாக்ஷி தோனியை பார்த்து இவ்வளவு பைக்குகளை ஏன் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு உண்டான தேவை என்ன? என கேட்கிறார். அதற்கு பதிலளித்த தோனி : வீடு முழுவதையும் நீ எடுத்துக் கொண்டாய் எனக்கென்று இருக்கும் இடம் இந்த இடம் மட்டும் தான். இது மட்டும் தான் எனக்கு பிடிக்கும் எனவே தான் இதை பராமரித்து வருகிறேன் என்று தோனி பதில் அளிக்கிறார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க மண்ணில் சரித்திரம் படைப்பதற்காகவே அவர ரெடி பண்றோம் – சீனியர் வீரருக்கு பேட்டிங் கோச் ஆதரவு

இதனை பார்த்த வெங்கடேஷ் பிரசாத்தும் இந்த இடமே ஒரு பைக் ஷோரூம் போல காட்சி அளிக்கிறது. இத்தனை பைக்குகளை வைத்திருக்க ஒரு பேஷன் வேண்டும் என்பது போல ஆச்சரியமாக தோனியிடம் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement