டி20 கோப்பையை என் கையில் குடுத்துவிட்டு ரோஹித் கூறிய வார்த்தைகள் இதுதான் – வெங்கடேஷ் ஐயர்

Venkatesh-iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் ஹார்டிக் பாண்டியா-க்கு பதிலாக அறிமுக வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இந்த தொடரில் பெற்றிருந்தார்.

Venkatesh-iyer

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இனிவரும் காலத்தில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற என்று பலரும் கூறி வரும் நிலையில் தான் சந்தித்த முதல் தொடரில் எவ்வாறு செயல்பட்டேன் என்பது குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கேப்டன் ரோகித் சர்மா எவ்வாறு ஆதரித்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அறிமுகமானதிலிருந்து தொடர் முழுவதும் என்னை கேப்டன் ரோஹித் ஊக்கப்படுத்தி கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி நாங்கள் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய போது வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னிடம் கோப்பையை கொடுத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டீர்கள் என்று கூறினார்.

ind

மேலும் இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று விளையாட வேண்டும். “ஆல் தி பெஸ்ட்”, வெல்டன் என்று என்னிடம் கூறி கோப்பையை கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடுங்கள் என்று கூறினார். இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பது மிகப் பெரும் மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு. ஆனா அது ஸ்டீவ் ஸ்மித் கிடையாது – புதிய கேப்டன் இவர்தான்

என்னுடைய வேலையை இந்த தொடரில் சரியாக செய்ததாக நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனி வரும் தொடர்களில் இந்திய அணியில் நான் எந்த இடத்தில் இரறங்கினாலும் நான் அந்த இடத்தில் விளையாட தயாராக உள்ளேன். என்னிடம் எதை கேட்டாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement