அவங்க 2 பேரும் இருக்கும் வரை இந்திய அணியை அசைச்சி கூட பாக்க முடியாது – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

Venkatesh-iyer-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அன்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்திருந்தது. இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேச ஐயர் 3 போட்டிகளிலும் விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் விளையாடிய அவர் 10 இன்னிங்ஸ்களில் 370 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி அவரது பவுலிங்கிலும் சிறப்பான செயல்பாடு தென்பட்டதன் காரணமாக உடனடியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ind

- Advertisement -

ஹார்திக் பாண்டியாவிற்கு பதிலாக வாய்ப்பினைப் பெற்றுள்ள வெங்கடேஷ் ஐயர் பின்வரிசையில் களமிறங்குவது மட்டுமின்றி பந்து வீசும் திறன் உடையவர் என்பதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் எதிர்கொண்ட இந்த முதல் தொடரிலேயே பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்தும், இந்திய அணியின் தற்போதைய சூழல் குறித்தும் பேசியுள்ள அவர் கூறுகையில் :

இந்திய அணியின் ஓய்வறை சூழல் தற்போது சிறப்பாக உள்ளது. பயிற்சியாளர் டிராவிடும், அணியின் கேப்டன் ரோஹித்தும் அனைத்து வீரர்களையும் சிறப்பாக ஊக்குவித்து வருகின்றனர். டிராவிட் சார் ஒரு ஜாம்பவான் வீரர் என்பது நாம் அறிந்ததே. அவர் இளம் வீரர்களை கையாளும் விதம் மிகவும் அற்புதமாக உள்ளது. டிராவிட் எனக்கு ஊக்கம் கொடுத்து நன்றாக விளையாட வைக்கிறார். அதேபோன்று அணியில் ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் இருப்பதனால் இந்திய அணியை சரியாக கையாளுகிறார்கள்.

dravid 1

மிகத் தெளிவாக திட்டங்களை கொடுக்கிறார்கள். அவர்களின் தலைமையில் நிச்சயம் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை எங்கு சென்றாலும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து கூறுகையில் : டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோர் இருப்பதனால் இளம் வீரர்களாக நாங்கள் மிகவும் ரிலாக்சாக இருக்கிறோம். அவர்கள் இருவரும் தங்களது அனுபவங்களை எங்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். குறிப்பாக ரோஹித் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று போட்டியின்போது நிறைய பேசுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமேல் அந்த அணிக்காக விளையாட எனக்கு விருப்பமில்லை. அதிரடி முடிவினை எடுத்த – ரஷீத் கான்

அதனால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. இந்த டி20 தொடரில் நான் அறிமுகமாகும்போது நிச்சயம் நீ சிறப்பாக விளையாடுவாய் என்ற நம்பிக்கை உள்ளது. இதே போன்று தொடர்ந்து விளையாடு என்று ரோஹித் என்னிடம் கூறினார். அவரது வார்த்தைகள் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது என்று கூறினார். இந்திய அணிக்காக தொடர்ந்து தான் விளையாட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement