- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினா? தோனியா? யாரு பெஸ்ட்? சில நொடி மவுனத்திற்கு பிறகு வெங்கடேஷ் ஐயர் அளித்த பதில் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டான வெங்கடேஷ் ஐயர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணிக்கு அதே ஆண்டு அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

சச்சினா? தோனியா? :

இருப்பினும் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் விரைவில் மீண்டும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட காத்திருக்கிறார்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் ஹார்டிக் பாண்டியாவிற்கு பிறகு இந்திய அணியில் நிலையான இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது சுமாரான ஆட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயரிடம் கிரிக்கெட் சம்பந்தமான சில கேள்விகள் கேட்கப்பட்டன.

- Advertisement -

அதில் எந்த வீரர் சிறந்த வீரர்? என்பது குறித்த கேள்விக்கு அடுத்தடுத்த வீரர்களின் பெயரை வர்ணனையாளர் மாற்றி மாற்றிக் கேட்க தனக்கு பிடித்த வீரர்கள் குறித்த பதிலை அளித்து வந்த வெங்கடேஷ் ஐயரிடம் இறுதியில் தோனியா? கோலியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் ஐயர் தோனி தான் சிறந்த வீரர் என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க : அது நாட் அவுட் தான் யாரும் அழாதீங்க.. டி20 உ.கோ ஃபைனல் சூரியகுமார் கேட்ச் பற்றி சம்சி கருத்து

கடைசியாக சச்சினா? தோனியா? என்ற கேள்விக்கு சில நொடிகள் மௌனமாக இருந்த வெங்கடேஷ் ஐயர் சற்று யோசித்த பின்னர் மீண்டும் எம்.எஸ் தோனி தான் சிறந்த வீரர் என்று கூறினார். தோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் வேளையில் கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெங்கடேஷ் ஐயரும் தோனியின் ரசிகர் தான் என்பது அவரது இந்த பதிலின் மூலம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -