அது உலகிற்கு அப்பாற்பட்ட கேப்டன்ஷி.. 2023இல் தன்னை அவுட்டாக்கிய தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக் பற்றி வெங்கடேஷ்

Venkatesh Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அறியப்படுகிறார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் பதறாமல் வித்தியாசமான முடிவுகளை எடுத்து கோப்பைகளை வெல்வதில் தோனி தன்னை சிறந்தவராக பலமுறை நிருபித்துள்ளார். அதனாலேயே அவரை பலரும் கேப்டன் கூல் தோனி என்று அழைப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் தோனி தம்மை அவுட்டாக்கிய விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக கொல்கத்தா அணியின் இளம் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். குறிப்பாக எப்படி அடிக்கப் போகிறேன் என்ற கோணத்தை முன்கூட்டியே கணித்து அவுட்டாக்கிய தோனியின் கேப்டன்ஷிப் உண்மையானது என்றும் அவர் பாராட்டியுள்ளார். அது பற்றி போட்டியின் முடிவில் தோனியிடம் கேட்டதாகவும் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்:

அது பற்றிய விவரங்களை சமீபத்திய பேட்டியில் வெங்கடேஷ் ஐயர் பகிர்ந்தது பின்வருமாறு. “டீப் ஸ்கொயர் பகுதியில் இருந்து தோனி ஒரு ஃபீல்டரை ஷார்ட் தேர்ட் பகுதியில் நிறுத்தினார். சொல்லப்போனால் பொதுவான ஷார்ட் தேர்ட் பகுதிக்கு கொஞ்சம் தள்ளி நிறுத்தினார். அடுத்த பந்திலேயே நான் அவர் நிறுத்திய ஃபீல்டரின் கையில் பந்தை அடித்தேன். போட்டி முடிந்ததும் அது பற்றி தோனியிடம் கேட்டேன்”

“அதற்கு அவர் சரியான பதிலை வைத்திருந்தார். அவர் எனது பேட்டில் பந்து பட்ட பின் ஏற்படும் தாக்கம் மற்றும் கோணத்தை புரிந்து கொள்ள முயற்சித்தார். பந்து செல்லும் கோணத்தை தோனி படிக்கும் விதம் இந்த உலகிற்கு அப்பாற்பட்டது. அந்த ஷாட்டை நான் அடித்தால் பந்து அங்கே செல்லும் என்பதை அறிந்து தோனி சரியாக ஃபீல்டரை நிறுத்தினார். ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்பதை புரிந்து செயல்படுவதே உண்மையான கேப்டன்ஷி”

- Advertisement -

வெங்கடேஷ் வியப்பு:

“அதுவே தோனியின் தந்திரம். நானும் 2 பந்துகள் வரை காத்திருந்து அடித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அடுத்த பந்தையே தோனி ஃபீல்டர் நிறுத்திய இடத்தில் அடித்தேன். விக்கெட் விழுந்தது. அது எப்படி நடந்தது என்பதை அதற்கடுத்த பந்தில் மைதானத்தில் இருந்த கேமராக்கள் துல்லியமாக காண்பித்தன”

இதையும் படிங்க: கனவில் வாழ்வது மாதிரி இருக்கு.. ஷார்ஜாவில் சிஎஸ்கேவை அடிச்ச பின் மஹி பாய் நட்பு வளந்துருச்சு.. சாம்சன் மகிழ்ச்சி

“எனவே களத்தில் சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்வது பேட்ஸ்மேனைப் பொறுத்தது” என்று கூறினார். இந்த நிலையில் 23.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் ஐயர் தக்க வைக்கப்பட்டுள்ளார். அது போக ரஹானே தலைமையில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாகவும் அவர் செயல்படப் போவது குறிப்பிடப்பட்டது.

Advertisement