10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த அதிர்ஷ்டம் – மச்சக்காரர் தான்

Venkatesh-iyer-3
Venkatsh KKR
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் 15 ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதனை தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணியுடன் சேர்ந்து லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய இரண்டு அணிகளும் இணைவதால் மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாட இருக்கின்றன. இந்நிலையில் இந்த சீசனுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் நான்கு வீரர்களை தான் தக்க வைக்கலாம் என்றும் மீதமிருக்கும் வீரர்கள் மெகா ஏலம் மூலம் அணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

kkr

அந்தவகையில் நேற்று நவம்பர் 30-ஆம் தேதி தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கெடு நிறைவடைந்ததை அடுத்து நேற்று இரவு அனைத்து அணிகளும் அதிகாரபூர்வமாக தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டனர். அந்த வகையில் கொல்கத்தா அணி தங்களது அணியில் தக்க வைக்கும் 4 வீரர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

அதன்படி ஆண்ட்ரே ரசல் 12 கோடிக்கும், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் கடந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை 10 ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த 10 போட்டிகளிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வெளிப்படுத்தினார்.

venkatesh iyer

இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்து உள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் ஒரு வீரரை அணியில் தக்கவைக்கும் போது அவருக்கு அதிகபட்சம் 4 கோடி வரை மட்டுமே கிடைத்திருக்கும்.

இதையும் படிங்க : மும்பை அணி கழட்டிவிட்ட ஹார்டிக் பாண்டியாவை பெரிய தொகைக்கு நேரடியாக எடுக்க விரும்பும் – ஐ.பி.எல் அணி

ஆனால் அவர் அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்ததால் அவர் தற்போது 8 கோடிக்கு கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய வீரர்களாகவும், ஆல்ரவுண்டர் ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் கொல்கத்தா அணியால் தக்கவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement