இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பேன்.. அந்த ஃபார்மட்டில் சான்ஸ் கொடுங்க.. வெங்கடேஷ் கோரிக்கை

Venkatesh Iyer
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் பெங்களூருவை நடப்பு சாம்பியன் கொல்கத்தா சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு இம்முறை அஜிங்கிய ரகானே கேப்டனாகவும் வெங்கடேஷ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றில் வெங்கடேஷ் அடுத்தடுத்த அரை சதங்களை அடித்தார்.

அந்த வகையில் கொல்கத்தா 3வது கோப்பையை வெல்ல உதவிய காரணத்தால் அவருக்கு துணை கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் அசத்தும் பட்சத்தில் வருங்காலத்தில் அவர் கொல்கத்தா அணியின் முழு நேர கேப்டனாகவும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தும் தாம் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் வாய்ப்பு:

2022ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாட வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் சிறப்பாக விளையாடி 2 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார்.

அதன் காரணமாக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனால் ஹர்திக் பாண்டியாவால் விளையாட முடியாத டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுப்பேன் என்று வெங்கடேஷ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்”

- Advertisement -

கடினமான வாய்ப்பு:

“ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் எனது கேரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும். என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதை என்னால் செய்ய முடியுமேயானால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை”

இதையும் படிங்க: ஆர்சிபியில் விராட் பாய் எனக்காக செஞ்சதை மறக்க முடியாது.. அந்த விதிமுறை ஹெல்ப் பண்ணும்.. சிராஜ் உருக்கம்

“வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார். இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் வெங்கடேஷ் ஐயர் பெரியளவில் அசத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையே நித்திஷ் ரெட்டி சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீபத்தில் அசத்தினார். எனவே வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement