பெங்களூரு அணியை சின்னா பின்னம் செய்த அறிமுக வீரர் – யார் இந்த வெங்கடேஷ் ஐயர் ?

Venkatesh-iyer-3
Venkatsh KKR

ஐபிஎல் தொடரில் 31-வது போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

venkatesh iyer 2

கடந்த சில தொடர்களாகவே கொல்கத்தா அணிக்கு சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் இருந்தது அந்த அணிக்கு ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. எத்தனையோ வீரர்களை அந்த அணி மாற்றி மாற்றி பார்த்தும் சரியான ஓப்பனிங் ஜோடி கிடைக்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் அணிக்கெதிரான இந்த போட்டியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி நிர்வாகம் களமிறக்கியது. தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து அதிரடியாக 41 ரன்களை குவித்தார்.

- Advertisement -

அதிலும் ஜேமிசன் ஓவரில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில் இந்த வெங்கடேஷ் ஐயர் என்பவர் யார் ? என்ற தேடலே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்த இவர் 2015ஆம் ஆண்டு ரயில்வே அணிக்காக அறிமுகமாகிய இவர் இடதுகை ஓபனிங் பேட்ஸ்மேன் மற்றும் மீடியம் வேகப்பந்துவீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு தனது பர்ஸ்ட் கிளாஸ் கரியரை துவங்கிய வெங்கடேஸ் ஐயர் இதுவரை 15 இன்னிங்ஸ்களில் 36.33 சராசரியுடன் 545 ரன்களை குவித்துள்ளார்.

venkatesh iyer

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய இவர் 146 பந்துகளில் 198 ரன்கள் அடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு பந்துவீச்சிலும் அந்த போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என ஆல்ரவுண்டர் திறமை கொண்ட இவரை கடந்த ஆண்டு கே.கே.ஆர் அணி நிர்வாகம் 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு வாங்கியிருந்தது.

- Advertisement -

venkatesh iyer 3

அதிரடியான பேட்ஸ்மேன் மற்றும் டீசன்டான பவுலர் என்பதனால் இவரை கொல்கத்தா அணி இந்த 20 லட்ச ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இந்தத் தொடரின் முதல் பாதியில் பெஞ்சில் அமர்ந்திருந்த இவரை பரிசோதிக்கும் விதமாக அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய இவர் தொடர்ந்து கொல்கத்தா அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement