- Advertisement -
ஐ.பி.எல்

நாக் அவுட்டில் முரட்டுத்தனமான ஓடும் வெங்கடேஷ் ஐயர்.. ரெய்னா போன்ற யாருமே செய்யாத மாஸ் சாதனை

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் தொடரின் 2024 சீசன் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அந்தத் தொடரில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது வெற்றிகரமான அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆல் அவுட்டான முதல் அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் படைத்தது. அதைத்தொடர்ந்து 114 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் 52*, குர்பாஸ் 39 ரன்கள் அடித்து 10.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

நாக் அவுட்டில் அபாரம்:
அதனால் 2016க்குப்பின் இரண்டாவது கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஹைதராபாத் கோட்டை விட்டது. முன்னதாக அந்த மாபெரும் இறுதிப் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 52* (26) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். அதே போல அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் இதே ஹைதராபாத்துக்கு எதிராக அவர் 51* ரன்கள் விளாசி கொல்கத்தா ஃபைனல் செல்ல உதவினார்.

இது போக கடைசியாக கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 55 (41) ரன்கள் அடித்து கொல்கத்தா ஃபைனலுக்கு தகுதி பெற உதவினார். அத்துடன் சென்னைக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் அவர் 50 (32) ரன்கள் அடித்தும் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அந்த வகையில் கடைசியாக விளையாடிய 4 ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் முறையே 55, 50, 51*, 52* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 4 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை வெங்கடேஷ் ஐயர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: பேசாம எல்லாரும் மதிக்கக் கூடிய தோனியை செலக்ட் பண்ணுங்க.. விராட் கோலியின் கோச் பேட்டி

இதற்கு முன் மும்பை அணிக்காக விளையாடிய லெண்டில் சிமன்ஸ் 3 முறை பிளே ஆஃப் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும். பொதுவாக அழுத்தமான பிளே ஆஃப் சுற்றில் பல ஜாம்பவான் வீரர்கள் தடுமாறுவது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் லீக் சுற்றில் சுமாராக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் முக்கியமான நாக் அவுட் சுற்றில் முரட்டுத்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கொல்கத்தாவின் வெற்றியில் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -