இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதேவேளையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 14 போட்டியிலே விளையாடி 7 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது.
இடம்மாற்றம் செய்யவுள்ள வெங்கடேஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் :
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற கொல்கத்தா அணி மீது பெரியளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த அணி வெளிப்படுத்திய இந்த மோசமான செயல்பாடு அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதோடு கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனிலும் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இவ்வேளையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கொல்கத்தா அணி ஒரு மிக முக்கியமான மாற்றத்தை செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அந்த அணிக்காக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை 23 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு அவரை கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது. ஆனால் இந்த வருடம் அவர் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். அதோடு மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமலும் இருந்தார்.
அதேவேளையில் சன்ரைசர்ஸ் அணிக்காக 11 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் 14 போட்டிகளில் 354 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் காரணமாக தற்போது வெங்கடேஷ் ஐயரை வெளியேற்ற விரும்பும் கொல்கத்தா அணியின் நிர்வாகம் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை சன்ரைசர்ஸ் அணியிலிருந்து இடம் மாற்றிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : இளம் வீரரான நிதீஷ் ரெட்டியின் கரியரை வீணடிக்கிறாரா கவுதம் கம்பீர்? வெளியான தகவல் – விவரம் இதோ
அடுத்த 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளில் டிரேடிங் நடைபெற வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வரும் வேளையில் கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும் டிரேடிங் நடைபெறவுள்ளது அதிகளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.



