தோனி ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க விரும்பினால். இதனை மட்டும் செய்ய வேண்டும் – வாகன் வேண்டுகோள்

Vaughan

தோனி இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடி பல சாதனைகள் படைத்தவர். 16 வருடங்கள் இந்திய அணியின் ஒரு வீரராகவும், பத்து வருடங்கள் கேப்டனாக இருந்து பல சாதனைகள் படைத்திருக்கிறார். இவரது காலத்தில்தான் இந்திய அணி ஒரு மிகச்சிறந்த உயரமான கட்டத்தை எட்டியது என்று கூறலாம்.

Dhoni

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெற்று விட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் பெரிதாக ஏதும் செய்யவில்லை. ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிவிட்டது. இதற்கு பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டியின்போது தோனிக்கு இது தான் கடைசி போட்டியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Dhoni 1

அதற்கு அவர் கண்டிப்பாக இல்லை. நான் அடுத்த வருடமும் ஆடுவேன் இன்னும் சில மாதங்கள்தான் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கிறது. அதனால் கண்டிப்பாக அடுத்த வருடம் ஆடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கல் வாகன் கூறியதாவது : தோனி போன்ற வீரர்கள் ரசிகர்கள் இல்லாமல் விடை பெறக் கூடாது. அப்படி அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற விரும்பினால் ரசிகர்கள் மத்தியில் விடைபெற வேண்டும்.

- Advertisement -

Dhoni-Csk

ஆளில்லா மைதானத்தில் அவரின் ஓய்வு இருக்க கூடாது. அடுத்த ஆண்டு ஒருவேளை ஐபிஎல் தொடர் யு.ஏ.இ நாட்டில் நடைபெற்றாலும் தோனி விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி அதற்கு அடுத்த வருடமும் கண்டிப்பாக ஆட வேண்டும். குறைந்தது ஒரு போட்டியிலாவது ரசிகர்களுடன் கோஷங்களை எழுப்பி பெருமையுடன் விடைபெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் வாகன்.