விராட் கோலியை விட இவர்தான் சூப்பர் பேட்ஸ்மேன். மீண்டும் சர்ச்சையை கிளப்பிய – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றியும், இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் எப்போதும் எக்குத்தப்பாக எதையாவது கூறி சர்ச்சையையக் கிளப்பும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹன், தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனையும், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியையும் ஒப்பிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றி பதிவிட்ட அவர்,
ஒருவேளை கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்று அவர்தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பதிவில் மேலும் அவர் கூறிய கருத்துதான் இப்போது சர்சையைக் கிளப்பியுள்ளது. அதில் பதிவிட்டிருந்த அவர்,

Williamson-1

- Advertisement -

விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த வீரர் என்ற உண்மையை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் விராட் கோலியின் திறமையை மட்டுமே பேசுகிறதே தவிர கேன் வில்லியம்சனைப் பற்றி அதிகமாக பேச மறுக்கிறது. இதனால்தான் தான் விராட் கோலி ஒரு சிறந்த வீரராக திகழ்கிறார். ஆனால் கேன் வில்லயம்சன், தன் அபார திறமையால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கோலிக்கு ஈடாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் அவர் மிக அமைதியாக செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அப்பதிவில், உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதிப் போட்டியில், விராட் கோலியை விட கேன் வில்லியம்சனே அதிக ரன்களை குவிப்பார் என்று கூறிய அவர், இங்கிலாந்தில் விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடுகளை குறித்தும் விமர்ச்சித்து இருக்கிறார். இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். 2018ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அதை திறமையாக எதிர்கொள்ள விராட் கோலியால் முடியாமல்போனது. அப்போதெல்லாம் அவர் இங்கு பெரிதாக சோபிக்கவில்லை. 2018ஆம் ஆண்டிற்கு பிறகான ஒரு தொடரில்தான் விராட் கோலி இங்கு நன்றாக ஆடினார்.

vaughan

ஆனால் கேன் வில்லியம்சன் அப்படியில்லை, அவர் எப்போதெல்லாம் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறாரோ அப்போதெல்லாம் தன் திறமையை நிரூபித்துள்ளார். ஒரே ஒரு தொடரில் நன்றாக விளையாடிய விராட் கோலியை மட்டும் இப்போது சிலர் புகழ்ந்து வருகின்றனர். அவர் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்களை வைத்திருப்பதாலும், ஆண்டிற்கு 30-40 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வணிக ரீதியில் சம்பாரிப்பதும்தான் இதற்கெல்லாம் கரணம் என்று கூறியிருக்கிறார் மைக்கேல் வாஹன்.

மைக்கேல் வாஹனின் இந்த கருத்து தற்போது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. அவருடைய கருத்துக்கு பதிலடி தரும் விதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்தியாவின் முன்னாள் வீரர்களான வாசிம் ஜாபர், இர்பான் பதான் ஆகியோரும் தங்களது கருத்துகளை அவருக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement