உலகின் சிறந்த “வழுக்கை தலை” வீரர்களின் பெஸ்ட் லெவன். இந்திய வீரருக்கு இடமில்லையா ? – விமர்சையான அணி இதோ

Bald
- Advertisement -

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட் தொடர்பான எந்த வேலையும் இல்லாமல் தற்போது தேவையில்லாத காரியம் ஒன்றை செய்துள்ளார். அதாவது தற்போது வரை கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் வழுக்கை உள்ள வீரர்களை மட்டும் வைத்து சிறந்த டெஸ்ட் அணியை ஒன்றை உருவாக்கியுள்ளார். இது உண்மையில் அவருக்கு தேவையில்லாத வேலை என்று தான் தெரிகிறது. ஏனெனில் அவரே வழுக்கையாக தான் இருப்பார்.

Vaughan

- Advertisement -

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அணியில் தொடக்க வீரர்களாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச் மற்றும் தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ்ஸை ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்திற்கு இவரது அணியில் தென்ஆப்பிரிக்க அணியின் வழுக்கைத்தலை வீரரான ஹாஷிம் அம்லா இடம்பெற்றுள்ளார். நான்காவது இடத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்த டேரன் லீ மேன் வருகிறார்.

அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த ஜொனாதன் டிராட் இருக்கிறார். இந்த அணிக்கு கேப்டனாக வரும் வழுக்கைத்தலை வீரரின் பெயர் பிரயான் கிளோஸ். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் 1949 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர் .

Bald 1

விக்கெட் கீப்பராக இங்கிலாந்து அணியின் வழுக்கைத்தலை வீரர் மேட் பிரியரை தேர்வு செய்துள்ளார். மைக்கேல் வாகனின் வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவின் டக் போலிங்கர் இருக்கிறார். இவர் தற்போது வழுக்கைத் தலை இல்லை ஏனெனில் இவர் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது வழுக்கையை மறைத்துவிட்டார்.

- Advertisement -

ஆல்-ரவுண்டராக பாகிஸ்தானின் ரானா நவித் ஹசனை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளராக நேதன் லயன் அல்லது ஜேக் லீச் ஆகியோரை தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாகன். இவரின் இந்த சிறந்த லெவனில் சேவாக்கை ஏன் சேர்க்கவில்லை என்று சிலர் கிண்டலாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sehwag

மைக்கேல் வாகனின் ‘வழுக்கை லெவன்’ : கிரஹாம் கூச், சேவாக் , ஹாஷிம் அம்லா, டேரன் லெஹ்மன், ஜொனாதன் ட்ராட், பிரையன் க்ளோஸ், மாட் ப்ரியர், டக் பொலிங்கர், ராணா நவேத்-உல்-ஹசன், நாதன் லியோன், ஜாக் லீச் / கிறிஸ் மார்ட்டின்

Advertisement