பும்ரா மற்றும் போல்ட் இருவரில் யார் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ? – மைக்கல் வாகன் அளித்த பதில் என்ன தெரியுமா ?

Vaughan

உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் நகரின் ரோஸ் பவுல் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்தவிருக்கின்றன. இத்த இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே சம பலத்துடன் இருப்பதால், இந்த இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த இறுதிப் போட்டி குறித்து கடந்த சில நாட்களாகவே தனது கருத்தை கூறி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹன், இந்திய அணிக்கு எதிரான கருத்துகளைகூறி சர்சையைக் கிளப்பி கொண்டு வருகிறார்.

vaughan 1

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுடன் ஒப்பிட்டு இவர் கூறிய கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பல முன்னாள் வீரர்களிடையேயும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சர்சை நாயகனிடம் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் சிறந்தவரா? அல்லது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா சிறந்தவரா? என்ற கேள்வியை எழுப்பியது ஒரு தனியார் விளையாட்டு இணையதளம்.

- Advertisement -

விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் தான் சிறந்தவர் என்ற கருத்தைக் கூறிய மைக்கேல் வாஹனால், இந்த கேள்விக்கு ஒரு மழுப்பலான பதிலைத் தான் தர முடிந்தது. இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், பும்ராவா? போல்ட்டா? நிச்சயமாக என்னால் இதற்கு சரியான முடிவை கூற முடியாது. என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒரு சிக்கலான நேரத்தில் சிக்கியிருக்கிறேன். ட்ரெட்ன் போல்ட்தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன். ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டிகளை நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார்.

boult1

ஆனால் பும்ரா மிகச் சிறந்த உக்திகளை வைத்திருக்கும் திறமையான பௌலர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் அவர் சிறப்பாக பந்து வீசி உள்ளார். எனவே இந்த கேள்வி மிகமிக நெருக்கமானது என்று நான் நினைக்கிறேனென்று அவர் கூறியிருக்கிறார். நியூசிலந்து அணியின் டெஸ்ட் வீரராக கடந்த 2011இல் அறிமுகமான ட்ரென்ட் போல்ட் இதுவரை அந்த அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 281 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

Bumrah-1

ஆனால் பும்ராவோ 2016ஆம் ஆண்டு தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இதுவரை இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 83 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு வீரர்களுமே அந்தந்த அணிக்கு மிக முக்கியமான வீரர்களாக பார்க்கப்படுகின்றனர்.

Advertisement