முட்டாள், வாயை மூடு என இந்திய ரசிகரை கண்டபடி திட்டிய இங்கிலாந்து வீரர். காரணம் என்ன தெரியுமா ?

Vaughan

நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Eng-1

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அந்த டிவீட்டில் இங்கிலாந்து அணியை வாழ்த்தி இருந்தார். அந்த ட்வீட்டை இந்திய ரசிகர் ஒருவர் விமர்சித்திருந்தார் அதில் ரசிகர் குறிப்பிட்டதாவது : போட்டியை இங்கிலாந்து அணி வீரர்கள் வெல்லவில்லை. அம்பயர் மற்றும் ஐசிசி விதியே இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்று பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட வாஹன் : முட்டாள் நீ உன் வாயை மூடு என்று இந்திய ரசிகர்கருக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். வாஹனின் இந்த டிவீட்டை கண்ட இந்திய ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்கள் மூலம் தொடர்ந்து வறுத்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.