தளபதி விஜய்-யின் புகைப்படத்தை டாட்டூவாக குத்தியுள்ள கொல்கத்தா வீரர் – வைரலாகும் புகைப்படம்

Kkr

நடப்பு ஆண்டின் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் த்ரில்லான வெற்றி, மோசமான தோல்வி என பல்வேறு முன்னணி அணிகளும் சுவாரசியத்தை கொடுத்து வருகின்றனர். அதனால் இந்த தொடர் தற்போது சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

KKR

இந்நிலையில் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடுகள் அதிக அளவில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியை சேர்ந்த வீரரான வருண் சக்கரவர்த்தி கையிலுள்ள விஜய்யின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஆவார்.

கிரிக்கெட் மீது உள்ள காதலை தாண்டி அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதன் அடையாளமாய் வருண் சக்ரவர்த்தி தனது இடது கையின் தோள்பட்டையில் தலைவா படத்தில் விஜய் கை தூக்கி திரும்பி நிற்கும் படி இருக்கும் டிரேட்மார்க் போஸை டேட்டூவாக குத்தியுள்ளார்.

varun 1

varun

- Advertisement -

இதனை அடையாளம் கண்ட ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வரவேற்பு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.