ரோஹித் சர்மா என்னை புரிந்துகொண்டதால் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது – வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சி

Varun
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற வேளையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

ரோஹித் என்னை நன்றாக புரிந்து கொண்டார் : வருண் சக்ரவர்த்தி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகிய வேளையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு இந்திய அணி வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் இணைத்தது. ஏற்கனவே நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும் போது ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளராக வருண் இணைந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணி அவரின் திறனை நம்பி அணிக்குள் இணைத்திருந்தது. அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெறாத அவர் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் சிறப்பாக செயல்படவும், தன்னுடைய அற்புதமான பந்துவீச்சு என்கிற மேஜிக் நிகழ காரணமே கேப்டன் ரோகித் சர்மா என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டது தான் என வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா என்னை சிறப்பாக கையாண்டார். பவர்பிளே ஓவர்களின் போது 2 ஓவர்கள், டெத் ஓவர்களின் போது 2-3 ஓவர்கள் என பந்து வீசிய நான் மிடில் ஓவர்களிலும் விக்கெட் தேவைப்படும்போது எல்லாம் பந்து வீசினேன்.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயம் போதும்.. சன் ரைசர்ஸ் தான் இம்முறை கப் அடிப்பாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

இப்படி என்னுடைய திறனை எங்கு வெளிக்காட்ட முடியும் என்று நான் சொல்லாமலே என்னை புரிந்து கொண்டு ரோகித் சர்மா என்னை அழகாக கையாண்டது தான் என்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்கு காரணமாக அமைந்தது. ரோகித் சர்மா நிச்சயம் எப்போதுமே சிறந்த கேப்டன்களில் ஒருவர் என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement