இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்த உலகக் கோப்பை தொடரின் போது அவர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக வெகு விரைவாகவே இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க அந்த 2 பேர் தான் காரணம் : வருண் சக்கரவர்த்தி
அதன் பின்னர் கடந்து சில ஆண்டுகளாக அவருக்கு மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனாலும் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் கம்பேக் வாய்ப்பிற்காக காத்திருந்த வேளையில் மீண்டும் இந்த ஆண்டு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக டி20 அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
அதுமட்டும் இன்றி நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் வெற்றியிலும் பங்காற்றி இருந்தார். அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் போட்டியிலும் 84 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 33 வயதான வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கு மீண்டும் இடம் கிடைக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : என்னுடைய கம்பேக் பயணத்தில் சூரியகுமார் யாதவ், கம்பீர் ஆகிய இருவரும் தான் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். ஏனெனில் வங்கதேச டி20 தொடருக்கு முன்னதாகவே என்னை அழைத்த சூரியகுமார் யாதவ் :
உன்னுடைய பந்துவீச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நிச்சயம் உன்னை எனது அணியில் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுவேன். தேர்வுக்குழுவினர் என்ன கூறுவார்கள்? என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. ஆனாலும் நீ என்னுடைய அணியில் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அளித்தார். அதேபோன்று கௌதம் கம்பீரும் என்னை தொடர்பு கொண்டு : நிச்சயம் நீ இந்திய டி20 அணியில் ஒரு அங்கமாக இருப்பாய்.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் இல்ல.. சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக மாறப்போகும் ஆர்.சி.பி வீரர் – விவரம் இதோ
உன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இரு என்று நம்பிக்கை கொடுத்தார். அவர்கள் இருவரும் அளித்த நம்பிக்கையை நான் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாக முக்கிய காரணம். அதோடு தற்போது என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கும் அவர்களுடைய ஆதரவு பெரிய பங்காற்றியுள்ளது என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.



