கே.எல் ராகுல் இல்ல.. சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக மாறப்போகும் ஆர்.சி.பி வீரர் – விவரம் இதோ

KL Rahul and Samson
- Advertisement -

2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது ஆகஸ்ட் 19-ஆம் தேதி மும்பையில் தேர்வுக்குழுவினர் மூலம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க பல்வேறு வீரர்களுக்கு மத்தியில் பலத்த போட்டி நிலவி வருவதால் இந்த இந்திய அணியின் அணித்தேர்வு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக வரும் ஆர்.சி.பி வீரர் :

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த மாபெரும் தொடரில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நாளைய அறிவிக்கப்பட இருக்கும் வேளையில் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் விளையாடும் சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக இந்திய அணியில் இணையப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கே.எல் ராகுல் சமீபத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அவரை டி20 போட்டிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் தற்போதைய சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக ஆர்.சி.பி அணியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பாட்டை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் பினிஷராக களமிறங்கும் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கே.எல் ராகுலை தாண்டி சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக ஜிதேஷ் சர்மாவே இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நானா இருந்தா ஆசிய கோப்பையில்.. அவருக்கு பதில் சூர்யவன்சியை விளையாட வைப்பேன்.. ஸ்ரீகாந்த் அதிரடி பேட்டி

மேலும் ஜிதேஷ் சர்மாவுக்கு போட்டியாக துருவ் ஜுரேலும் இருப்பதினால் அவர்களுக்கு இடையே பலத்த போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஜிதேஷ் சர்மா ஏற்கனவே இந்திய அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கே இம்முறை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement