அண்மையில் துபாய் மண்ணில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது வெற்றிகரமாக கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டு தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். அவரது சேர்க்கை அந்த நேரத்தில் பெரியளவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்திய அணியில் இடம் கிடைத்தது இப்படித்தான் : வருண் சக்ரவர்த்தி
ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரியளவில் விளையாடாத அவரை ஏற்கனவே நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது ஐந்தாவதாக சேர்த்தது எதற்கு? என்ற கேள்வியும் எழுந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பிடித்த அவர் கடைசி போட்டியின் போது விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.
ஆனாலும் அவரது பந்துவீச்சில் உள்ள வேரியேஷன்களை நம்பி அவரை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இணைத்தது. அப்படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்த அவர் முதல் 2 லீக் போட்டிகளிலும் இடம் பிடிக்காமல் இருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 2 விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்றும் தான் எவ்வாறு செயல்பட்டேன்? என்பது குறித்தும் சில வெளிப்படையான கருத்துக்களை வருண் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த போது சென்னைக்கு கிளம்பலாம் என்று இருந்தேன். ஆனால் நான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என அணி நிர்வாகத்தினர் என்னிடம் கூறினர்.
இதையும் படிங்க : தோனியின் தலைமையில் ஆல்டைம் இந்திய பெஸ்ட் ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த – சுனில் கவாஸ்கர்
பின்னர் ஒருநாள் தொடர் முடிந்த பிறகும் சென்னைக்கு கிளம்பலாம் என்று நான் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எனக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் துபாய் செல்ல தயாராகுங்கள் என்று கூறினர். பின்னர் நான் இந்திய அணியுடன் துபாய் பயணித்து தற்போது கோப்பையையும் வென்று விட்டதில் மிகவும் மகிழ்ச்சி என வருண் சக்கரவர்த்தி பூரிப்புடன் பேசியது குறிப்பிடத்தக்கது.



