தோனியின் தலைமையில் ஆல்டைம் இந்திய பெஸ்ட் ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது.

கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் அணி :

அதற்கடுத்து தற்போது 12 ஆண்டுகள் கழித்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றியதால் இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் இந்திய அணியின் செயல்பாடுகளுக்கும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் பெருகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இதுவரை விளையாட வீரர்களை வைத்து சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனான தோனிக்கு கேப்டன் பதவியினை அவர் வழங்கியுள்ளார். அது தவிர்த்து துவக்க வீரர்களாக சச்சின் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் விராட் கோலியையும், நான்காவது இடத்தில் மொஹிந்தர் அமர்நாத்தையும் தேர்வு செய்துள்ளார்.

ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங்கையும், ஆறாவது இடத்தில் மகேந்திர சிங் தோனியை கீப்பர் மற்றும் கேப்டனாக அறிவித்துள்ளார். ஏழாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கபில் தேவையும், எட்டாவது இடத்தில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். அதற்கடுத்து ஒன்பதாவது இடத்தில் ஹர்பஜன் சிங்கையும் மற்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் ஜாகிர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் ரோஹித், விராட், ஜடேஜா, ஷமி ஆகிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நான்கு வீரர்களுக்கு அவர் இடம் அளித்துள்ளார். அந்த வகையில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல் டைம் பெஸ்ட் ஒருநாள் இந்திய அணி இதோ :

இதையும் படிங்க : எனக்கு அந்த பதவியே வேணாம்.. என்னை ஆள விடுங்க.. டெல்லி நிர்வாகத்திடம் – கே.எல் ராகுல் சரண்டர்

1) ரோஹித் சர்மா, 2) சச்சின் டெண்டுல்கர், 3) விராட் கோலி, 4) மொஹிந்தர் அமர்நாத், 5) யுவ்ராஜ் சிங், 6) மஹேந்திர சிங் தோனி, 7) கபில் தேவ், 8) ரவீந்திர ஜடேஜா, 9) ஹர்பஜன் சிங், 10) முகமது ஷமி, 11) ஜாஹீர் கான்.

Advertisement