தோனியின் பேட்டிங்கை பார்க்க மைதானத்திற்கு ரசிகனாக ஸ்டேடியத்திற்கு வந்தேன். அனால் இன்று – வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி

varun chakravarthy
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் தோனியின் விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகிய இருவரும் நடத்திய உரையாடலில் சில முக்கிய விடயங்களை வருண் சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலில் வரும் சக்கரவர்த்தி தோனி குறித்து கூறியதாவது : டோனிக்கு எதிராக பந்துவீச எனக்கு பயமாக இருந்தது. ஏனெனில் மூன்று வருடங்களுக்கு முன்புவரை சேப்பாக்கம் மைதானத்துக்கு ரசிகர்கள் கூட்டத்தில் ஒருவராக நானும் அமர்ந்து தோனியின் பேட்டியைப் பார்த்து வந்தேன்.

out

அவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வந்த நான் இன்று அவருக்கு எதிராக பந்துவீசி விக்கெட் எடுத்தும் உள்ளேன். இது எனக்கு ஒரு நம்ப முடியாத தருணம். போட்டி முடிந்த பின்னர் தோனியுடன் ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டேன். தமிழில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் “தல தல தான்” என்று தோனியை புகழ்ந்து வருண் சக்ரவர்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement