818 ரேட்டிங்.. பும்ராவின் ஆல் டைம் சாதனையை உடைத்த வருண்.. இந்தியாவுக்காக 2 வரலாற்று சாதனை

Varun Chakravarthy
- Advertisement -

ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இந்தியா ஜொலித்து வருகிறது. அதற்கு பேட்டிங்கில் பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றி வருகிறார். அதனால் டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து அசத்தி வருகிறார்.

அதே போல பந்து வீச்சுத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதிலும் குறிப்பாக 3வது போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

- Advertisement -

பும்ராவை முந்திய வருண்:

இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். சொல்லப்போனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் அவர் கூடுதல் புள்ளிகளை பெற்று மொத்தம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளார்.

இதன் வாயிலாக ஐசிசி டி20 போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இதற்கு முன் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 783 புள்ளிகளைப் பெற்றதே முந்தைய சாதனை. அதற்கு முன் மற்றொரு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 772 புள்ளிகளைப் பெற்றதே முந்தி அதிகபட்சமாகும்.

- Advertisement -

800 ரேட்டிங் புள்ளிகள்:

தற்போது அவர்கள் இருவரையும் முந்தியுள்ள வருண் சக்கரவர்த்தி ஐசிசி டி20 தரவரிசையில் 800 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார். அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் தன்னுடைய பந்து வீச்சை மெருகேற்றி சிறப்பாக பவுலிங் செய்தார்.

இதையும் படிங்க: நன்றி சிஎஸ்கே, மஹி பாய்.. எப்போதும் இதயத்தில் இருப்பதை மறக்க மாட்டேன்.. பதிரனா நெகிழ்ச்சி பதிவு

குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவிய காரணத்தால் அவருக்கு இந்திய அணியில் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஐசிசி டி20 தரவரிசையில் தற்போது அதிக புள்ளிகளைப் பெற்ற ஆல் டைம் நம்பர் ஒன் இந்திய பவுலராகவும் அவர் வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement