ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி மதிஷா பதிரனாவை வாங்கவில்லை. அவரை கொல்கத்தா அணி 18 கோடி என்று பெரிய தொகைக்கு வாங்கியது. இலங்கையை சேர்ந்த அவர் ஜாம்பவான் லசித் மலிங்கா போலவே ஸ்லிங்கா ஆக்சனை வைத்து பந்து வீசினார்.
உள்ளூரில் விளையாடி வந்த அவரை கண்டறிந்த சிஎஸ்கே முதலில் தங்களுடைய நெட் பவுலராக வாங்கியது. அந்த வகையில் சிஎஸ்கே அணிக்குள் சென்ற பதிரனா வலைப்பயிற்சியில் தோனி போன்ற பல நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துகளை வீசி தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். அதனால் முன்னேற்றமடைந்த அவருக்கு 2022 ஐபிஎல் சீசனில் விளையாடும் வாய்ப்பை சிஎஸ்கே நிர்வாகம் கொடுத்தது.
சென்னைக்கு நன்றி:
அந்த வாய்ப்பில் மலிங்கா போல யார்கர் பந்துகளை போட்டு அசத்திய பதிரனா 2023 சீசனில் 19 விக்கெட்டுகளை எடுத்து சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அவரை சரியாக பயன்படுத்தினால் இலங்கை அணியின் சொத்தாக இருப்பார் என்று தோனி பாராட்டினார்.
அதனால் கடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே பதிரனா 13 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. ஆனால் கடத்த சீசனில் மோசமாக பந்து வீசிய அவரை சிஎஸ்கே கழற்றி விட்ட நிலையில் கொல்கத்தா வாங்கியுள்ளது. இந்நிலையில் தம்முடைய இதயத்தில் அணிக்கு சிஎஸ்கே அணிக்கு தனி இடம் இருக்கும் என்று பதிரனா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
பதிரனா நெகிழ்ச்சி:
“கனவுகளுடன் இருந்த பையன் மஞ்சள் ஜெர்ஸியை பெருமையுடன் அணிந்தேன். சிஎஸ்கே எனக்கு கிரிக்கெட் மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் ஒரு குடும்பமாக நான் போற்றுவதற்கான வாய்ப்பையும் கொடுத்தது. 2022 – 2025 வரை மஞ்சள் உடையில் ஒவ்வொரு தருணமும் என்னை கிரிக்கெட்டராகவும் நபராகவும் வடிவமைத்தது. என்னுடைய கடைசி சீசனை சிஎஸ்கே அணியுடன் ஸ்பெஷலாக முடிக்க விரும்பியது நடக்கவில்லை. அந்த அணிக்காக 50 விக்கெட்டுகள் எடுத்தது சிறந்தது. அந்தக் கனவு மற்றும் முயற்சி எப்போதும் இதயத்தில் இருக்கும்”
இதையும் படிங்க: தனியாளா 5க்கு 5 போட்டியை ஜெய்த்து கொடுக்கக் கூடிய திறமையான.. அவர் சீக்கிரம் ப்ளாஸ்ட் ஆவாரு.. துபே பேட்டி
“என்னிடம் வழிகாட்டுதல்கள் மற்றும் தன்னம்பிக்கை கொடுத்த தோனி பாய்க்கு எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். என்னை நம்பிய காசி சார், சென்னை அணி நிர்வாகம், ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். சென்னை எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடம் பிடிக்கும். அந்த மரியாதையுடன் நான் கொல்கத்தாவில் புதிய அத்தியாயத்தை துவங்குகிறேன். நன்றி சிஎஸ்கே, சென்னை” என்று பதிவிட்டுள்ளார்.



