இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
2021ஆம் ஆண்டு அறிமுகமாகி தாக்கத்தை ஏற்படுத்தாததால் கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவினார். அதன் காரணமாக புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம், தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய அவர் தற்போது இங்கிலாந்து தொடரிலும் நன்றாக பவுலிங் செய்து வருகிறார்.
கம்பேக் வாய்ப்பு:
இந்நிலையில் ஐபிஎல் மட்டுமல்ல சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியதும் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க உதவியதாக வருண் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட்டின் தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது. சொல்லப்போனால் அது ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக இருக்கிறது என்று சொல்வேன்”
“சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அனைவரும் விளையாட வேண்டும் என்று நான் பரிந்துரை செய்வேன். ஏனெனில் அந்தத் தொடரில் நாங்கள் மிகவும் சிறிய மைதானத்தில் விளையாடுவதால் பவுலிங் செய்வது சவாலாக இருக்கும். அங்கே சவாலே சமாளித்து என்னுடைய உள்ளுணர்வுகளை நம்பி விளையாடுவது எனக்கு உதவுகிறது. அது எனக்கு சரியாக உதவுகிறது என்று நினைக்கிறேன்”
ரோஹித், கோலிக்கு பாடம்:
“சென்னையில் இந்திய அணிக்காக நீல ஜெர்ஸியில் விளையாடுவது எனக்கு முக்கியமானது. எனது சொந்த ஊரில் சொந்த ரசிகர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னிலையில் நாட்டுக்காக விளையாடுவது மிகவும் ஸ்பெஷல். ஆக்ரோசத்துடன் ஸ்டம்ப் லைனில் பந்து வீச வேண்டும் என்பதே அணியில் அணியில் எனது வேலை. அதை தவிர்த்து வேறு எக்ஸ்ட்ரா பொறுப்பு கொடுக்கப்படவில்லை”
இதையும் படிங்க: இதை செஞ்சும் சாம்சனை ஏன் எடுக்கல? சஹாலை கழற்றி விட்டு அதை மிஸ் பண்றிங்க.. ஹர்பஜன் அதிருப்தி
“கம்பீர், சூரியகுமார் ஆகியோர் வீரர்களுக்கு வேறு அழுத்தமும் கொடுப்பதில்லை” என்று கூறினார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சமீப காலங்களில் தொடர்ச்சியாக அசத்துவதற்கு தடுமாறுகிறார்கள். அதற்கு கோலி, ரோஹித் முறையே 2012, 2015க்குப்பின் உள்ளூர் கிரிக்கெட்டின் பக்கம் தலை கூட வைக்காததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பாடமாகும் வகையில் சக்கரவர்த்தியின் இந்த கருத்து இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.