இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பிப்ரவரி மாதம் துபாயில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாட உள்ளது. அதில் விளையாடுவதற்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கருண் நாயர், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிசப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் ரிசப் பண்ட் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தியதில்லை. மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போட்டியில் சதத்தை அடித்த சாம்சன் 55 என்ற நல்ல சராசரியை கொண்டுள்ளார்.
பரிதாப சாம்சன்:
இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் 55 என்ற நல்ல சராசரியை கொண்டிருந்தும் சாம்பியன்ஸ் டிராபியில் எடுக்காததற்கு ஹர்பஜன் சிங் விமர்சனம் தெரிவித்துள்ளார். மேலும் சஹால் போன்ற லெக் ஸ்பின்னர் துபாயில் இந்தியாவின் வெற்றிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.
“சாம்சனுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ரன்கள் அடித்த பின்பும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருடைய பேட்டிங் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உகந்தது என்று நான் கருதுகிறேன். 55 – 56 என்ற நல்ல சராசரியை கொண்டிருந்தும் அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை”
சஹால், ஜெய்ஸ்வால் இடங்கள்:
“ஆனால் அவருடைய இடத்தை பற்றி பேசும் போது யாருக்கு பதிலாக தேர்வு செய்வது என்று சிலர் கேட்கிறார்கள். அந்த வகையில் சஞ்சு இல்லை. சஹாலும் இல்லை. நீங்கள் 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளீர்கள். அதில் 2 பேர் இடது கை வீரர்கள். நீங்கள் வேரியசன் பெறுவதற்காக ஒரு லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்திருக்கலாம். சஹால் சூப்பரான பவுலர்”
இதையும் படிங்க: 3 பார்மட் 500 விக்கெட்ஸ்.. அஸ்வினை என்னால் நெருங்க கூட முடியாது.. இதை செஞ்சாலே போதும்.. வருண் பேட்டி
“இருப்பினும் அணியில் இடம் பிடிக்க முடியாத அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அதே போல ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் அந்த வாய்ப்பை பெற மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. ஏனெனில் மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயாஸ் விளையாடுவார்கள் என்பதால் அவருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காது” என்று கூறினார்.