இம்முறை விராட் கோலியை சமாளிக்க இந்த திட்டம் வெச்சுருக்கேன்.. ஆர்சிபியை எதிர்கொள்வது பற்றி வருண்

Varun Chakravarthy 2
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் அந்தப் போட்டியில் நம்பிக்கையை நட்சத்திரம் விராட் கோலியை எதிர்கொண்டு பெங்களூரு அணியை வீழ்த்துவதற்கு தயாராக இருப்பதாக கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய சீசன்களில் விராட் கோலிக்கு எதிராக அவர் 39 பந்துகள் வீசியுள்ளார். அதில் 40 ரன்கள் கொடுத்துள்ள வருண் ஒருமுறை மட்டுமே விராட் கோலியை அவுட் செய்துள்ளார். எனவே இம்முறை விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக வருண் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

விராட் கோலி சவால்:

“கடந்த வருடத்தில் செய்த அதே தயாராகும் முறைகளை இந்த வருடமும் நான் செய்துள்ளேன். விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன். கண்டிப்பாக அவர் எனக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்தார். நானும் அவருக்கு எதிராக நன்றாக பௌலிங் செய்ய விரும்புகிறேன். ஐபிஎல் போன்ற தொடரில் நீங்கள் எந்த அணியையும் எளிதாக நினைக்கக் கூடாது”

“இந்தத் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளைப் போலவே நல்ல அணியாக இருக்கும். ஆர்சிபி தரமான அணி. அவர்களை சமாளிப்பதற்கான வீட்டுப் பாடங்களை நாங்கள் செய்துள்ளோம். தனிப்பட்ட முறையில் நான் என்னுடைய வீட்டுப் பாடங்களில் வேலை செய்துள்ளேன். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் போதெல்லாம் நான் ஏதாவது புதிதாக முயற்சி செய்துள்ளேன்”

- Advertisement -

தயாராக வருண்

“ஒவ்வொரு வருடமும் நான் புதிதாக பவுலிங் செய்ய முயற்சி செய்கிறேன். கடந்த வருடம் அது வேலை செய்தது. அதற்கு முந்தைய வருடங்களில் அது வேலை செய்யவில்லை. எனவே இந்த வருடம் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு எதிராக சில பந்துகளை வைத்துள்ளேன். அதைப் பயன்படுத்துவது சூழ்நிலையைப் பொறுத்து அமையும். அடிப்படையில் பந்து 3 வகைகளில் செல்லும்”

இதையும் படிங்க: தோனி ஓகே சொன்ன பிறகு தான் நான் அந்த முடிவுக்கே ஒத்துக்கிட்டேன் – டுவைன் பிராவோ வெளிப்படை

“நேராக, இடது அல்லது வலது புறங்களில் செல்லும். எனவே அதில் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுவது முக்கியம். எனது கேப்டனுக்கு தேவைப்படும் போது பவர் பிளே, மிடில், டெத் ஓவர்கள் உட்பட போட்டியின் எந்த சூழ்நிலையிலும் பவுலிங் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த வருடம் எங்களுக்கு புதிய கேப்டன் வந்துள்ளார். அவர் எந்த இடத்தில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றி பேசியுள்ளார். நானும் எனது கருத்துக்களை அவரிடம் தெரிவித்துள்ளேன்” என்று கூறினார்.

Advertisement