அதுல போராடி ஜெயிச்சு தான் வந்துருக்கேன்.. ஜடேஜாவின் வாழ்த்துடன் அறிமுக வாய்ப்பு பற்றி வருண் பேட்டி

Varun Chakravarthy 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்படாத தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கடைசி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில் 2021ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராத சக்கரவர்த்தி உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி வந்தார். அதன் பயனாக கடந்த வருடம் ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்வதற்கு உதவிய அவரை புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் சமீபத்திய வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் அபாரமாக பவுலிங் செய்த சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

வாழ்த்திய ஜடேஜா:

இதற்கிடையே 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழ்நாடு அணிக்காக அவர் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன் காரணமாக இத்தொடரில் கடைசி நேரத்தில் தேர்வான அவருக்கு பிப்ரவரி ஒன்பதாம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு அறிமுகத் தொப்பியை ரவீந்திர ஜடேஜா கொடுத்து வாழ்த்தியது பின்வருமாறு.

“வருண் தொப்பி எண் 259. இது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஸ்பெஷல் நாள். டென்னிஸ் பந்தில் விளையாடி டி20 கிரிக்கெட்டில் விளையாடியது வரை உங்களுடைய மேஜிக்கை நாங்கள் பார்த்துள்ளோம். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் அதைச் செய்யும் நேரம் வந்துள்ளது. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுடைய 100% பங்களிப்பைக் கொடுங்கள் வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

- Advertisement -

போராடி வந்த வருண்:

அதை கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர், விராட் கோலி ஆகியோருக்கு மத்தியில் இந்திய வீரர்களின் கைதட்டலுடன் வருண் வாங்கிக் கொண்டார். அப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாகப் போராடி சாதித்து இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் நன்றாக உணர்கிறேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இது பெரிய பயணம். அதில் தற்போது எனக்கு திருப்புமுனைக் கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: 304 ரன்ஸ்.. இங்கிலாந்துக்காக ஆல் டைம் சாதனை படைத்த ரூட்டை.. 13வது முறை காலி செய்த ஜடேஜா சாதனை

“நான் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்று இங்கே வந்துள்ளேன். இதை கண்டிப்பாக நான் நினைத்து மகிழ்வேன். அதற்கு மதிப்பையும் கொடுப்பேன்” என்று கூறினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அந்த வகையில் போராடி 33 வயதில் அறிமுகமான வருண் தனது முதல் போட்டியிலேயே விக்கெட் எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement