தனது தீவிர ரசிகரான வருண் சக்ரவர்த்தியின் ஆசையை நிறைவேற்றிய விஜய் – வைரலாகும் புகைப்பம்

Varun

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விளையாடினார். தினேஷ் கார்த்திக் தலைமையின் கீழ் விளையாடிய இவர் அவரின் புரிதலோடு தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகளையும் ஒரே போட்டியில் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Varun-chakravarthy

இந்த அசத்தலான ஆட்டத்தினால் தேர்வுக் குழுவினரின் கண்ணில் பட்டார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி20 அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவரின் மாயாஜால சுழலில் சிக்கி சர்வதேச பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக டோனியை கிளீன் போல்ட் செய்தது இன்னும் ரசிகர்கள் கண்ணில் நிற்கிறது. அந்த அளவிற்கு தனது சிறப்பான பந்துவீச்சை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகினார். கிரிக்கெட் மீது எவ்வளவு காதல் இருக்கிறதோ அதே போன்று தமிழ் நடிகர் விஜயின் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகரான அவர் தனது இடது கையின் தோள் பட்டையில் தலைவா படத்தில் இருக்கும் ட்ரேட் மார்க் போசை தனது உடம்பில் டேட்டூ போட்டுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது விஜய் ரசிகர்களால் இணையத்தில் அந்த புகைப்படம் வைரலானது.

varun

மேலும் ஒருமுறை பாஸ்கி உடன் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது விஜய் சாரை எப்படியாவது சந்திக்க வேண்டும். உங்களால் முடிந்தால் உதவுங்கள் என்று என்று சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தியின் அந்த கனவு நனவாகியுள்ளது. நடிகர் விஜய்யை வருண் சக்ரவர்த்தி அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்துள்ளார். மேலும் விஜயுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் : உள்ள வந்தா பவருடி.! அண்ணன் யாரு ? தளபதி என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Varun 1

அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த சந்திப்பு அடையாறு இல்லத்தில் ஒரு சிறிய விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறம் இது விஜய்யின் அலுவலகத்தில் நடந்த ஒரு மரியாதைக்கு உரிய சந்திப்பு என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இது குறித்த உண்மைத் தகவலை இன்னும் வருண் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.