நடராஜன் மாதிரி வருண் சக்ரவர்த்தியும் செஞ்சிருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது – ஒரே ஆள் எல்லாம் க்ளோஸ்

Varun
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வேளையில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த 30 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரரான வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்த போட்டி தடைபட்டது. அப்படி இங்கு ஆரம்பித்த பிரச்சனை இன்று ஐபிஎல் தொடரை காலவரையறையின்றி ஒத்தி வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

KKRvsRCB

- Advertisement -

ஏனெனில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மூலம் அந்த அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியில் மூன்று பேருக்கும், டெல்லி அணியில் ஒருவருக்கும், சன்ரைசர்ஸ் அணியில் ஒருவருக்கும் என கொரோனா வைரஸ் வீரர்களிடையே அதிகரிக்கத் துவங்க இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி பாதுகாப்பையும் மீறி கொரோனவைரஸ் வருண் சக்கரவர்த்திக்கு வந்த காரணம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த காரணம் யாதெனில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வீரர்கள் பயோ பபுளில் இருந்த வேளையில் வருன் சக்ரவர்த்தி தனது காயத்திற்கு ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் அணியில் எந்தவித தனிமைப்படுத்துதலும் இன்றி அணிக்குள் இணைந்தது பெரிய தவறு என அணியின் மருத்துவர்கள் கூறியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் மருத்துவ பாதுகாப்பு வட்டத்தை மீறி வெளியே சென்று உள்ளே வந்துள்ளதால் இந்த இடைப்பட்ட காலத்தில் தான் அவருக்கு கொரோனா பரவி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Varun

இதற்கு முன்னர் சன் ரைசர்ஸ் அணியின் வீரரான நடராஜனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை தேவைப் பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி தற்போது அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அதனைப் போன்றே இவரும் அணியில் வெளியேறி இருந்தால் வீரர்களுக்கு இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டிருக்காது. இந்நிலையில் ஸ்கேன் செய்து விட்டு மீண்டும் வந்த வருண் சக்ரவர்த்தி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

அதனால் டெல்லி அணி வீரர்களுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அது தவிர தற்போது அடுத்தடுத்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். வருன் சக்ரவர்த்தி செய்த இந்த சிறிய தவறினால் தற்போது ஒட்டுமொத்த தொடரும் ஒத்திவைக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement