தோனி போல வருண் சக்ரவர்த்தியை அடிக்க.. விரித்த வலையில் தாமே விழுந்த டிம் டேவிட்.. நடந்தது என்ன?

Varun Chakravarthy
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் 126/6 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மார்ஷ் 46 ரன்கள் எடுத்து 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சொந்த வலையில் டிம் டேவிட்:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அப்போட்டியில் டிம் டேவிட் பேட்டிங் செய்ய வந்ததும் இந்தியாவுக்காக விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பவுலிங் செய்ய வந்தார். அப்போது வருண் ஓடி வந்து பந்தை கையிலிருந்து வெளியிடுவதற்கு முன் திடீரென டிம் டேவிட் எதிர்கொள்வதிலிருந்து விலகினார்.

குறிப்பாக அவருடைய கவனத்தை சீர்குலைத்து அடிப்பதற்காக டிம் டேவிட் திட்டமிட்டார் என்றே சொல்லலாம். அதை புரிந்து கொண்ட சக்கரவர்த்தி அடுத்த பந்தை வீசுவதற்காக ஓடி வந்து கையிலிருந்து வெளியிடுவதற்கு முன் திடீரென விலகி அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட டேவிட் அடுத்த 4 பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை.

- Advertisement -

வருண் பதிலடி:

ஆனால் அடுத்த பந்தை தடுக்க முயற்சித்த அவர் வருண் சக்கரவர்த்தி கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிலிருந்து வருண் சக்கரவர்த்தியின் கவனத்தை சீர்குலைத்து அடிக்க முயற்சித்த டிம் டேவிட் கடைசியில் அதே வலையில் விழுந்து விக்கெட்டை இழந்து பரிதாபமாக பெவிலியன் திரும்பினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் கைரன் பொல்லார்ட் இப்படி வம்பிழுத்த போது தோனி வெற்றிகரமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்க தனியாள் இல்ல.. மொத்த இந்திய ரசிகர்களுக்காக உ.கோ ஜெய்ப்போம்.. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டி

அதே போன்ற யுக்தியை கையில் எடுத்த டிம் டேவிட் கடைசியில் தாம் விரித்த வலையில் தாமே விழுந்தார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து 3வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி முயற்சிக்க உள்ளது. அந்தப் போட்டி நவம்பர் இரண்டாம் தேதி ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement