டீம்ல சேன்ஸ் கொடுக்குறமாதிரி கொடுத்து கழட்டி விடப்பட்ட தமிழக வீரர் – இனிமேல் சேன்ஸ் கிடைக்குறது கஷ்டம்

Varun-1
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறிய நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட அணி பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ashwin

- Advertisement -

நவம்பர் 17ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடருக்கான அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்திய அணியின் எதிர்காலம் வீரராக இருப்பார் என்று பேசப்பட்ட வருண் சக்கரவர்த்தி உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வருண் சக்கரவர்த்தியால் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே அவர் உடனடியாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார். உலகக் கோப்பையில் நிச்சயம் சர்வதேச அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வருண் சக்கரவர்த்தி மோசமான செயல் பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

varun 1

மேலும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து அவர் கழட்டி விடப்பட்டுள்ளதால் இனி அவர் இந்திய அணிக்கு தேர்வாவது கடினம் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வாகும் போது இனி வரும் அனைத்து தொடர்களிலும் நிச்சயம் வருண் சக்ரவர்த்தி முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவரிடமிருந்து மோசமான செயல்பாடு வெளிவந்தது அனைவருக்கும் ஏமாற்றத்தையே தந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் – இப்போதான் கரெக்ட்டான முடிவு எடுத்திருக்காங்க

அதே வேளையில் மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரான அனுபவ வீரர் அஷ்வின் உலக கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக நியூசிலாந்து தொடரில் விளையாட உள்ளார். சீனியர் வீரரான அஷ்வின் பல ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் இடம்பிடித்து தற்போது அந்த வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement