கம்பேக்ன்னா இப்படி இருக்கனும்.. அஸ்வின் சாதனையை உடைத்த சக்ரவர்த்தி.. புதிய சாதனை

Varun Chakravarthy 3
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோற்றது. இருப்பினும் 3வது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

செஞ்சூரியன் நகரில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா திலக் வர்மா 107*, அபிஷேக் சர்மா 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 220 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய தென்னாபிரிக்கா 20 ஓவரில் 208-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக க்ளாஸென் 41, யான்சென் 54 ரன்கள் எடுத்தனர்

- Advertisement -

அசத்தும் வருண்:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். மேலும் 2021 டி20 உலகக் கோப்பையிலும் அவர் இந்திய அணிக்காக தேர்வானார். இருப்பினும் அந்த வாய்ப்பில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் கழற்றி விடப்பட்டார்.

ஆனால் மனம் தளராத அவர் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக பந்து வீசி கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு வந்தார். அதன் காரணமாக அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேச தொடரில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

சாதனை கம்பேக்:

அதே வேகத்தில் இந்த தொடரிலும் அசத்தி வரும் அவர் இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோரின் சாதனைகளை உடைத்து வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இலங்கை எதிரான தொடரில் அஸ்வின் 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான கடைசி போட்டியில் அறிமுகமாக இருக்கும் யாஷ் தயாள் – 3 முக்கிய காரணங்கள்

அதே போல 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரவி பிஸ்னோய் 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது அவர்களை முந்தி வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் கம்பேக் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சக்கரவர்த்தி அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement