18 விக்கெட்ஸ்.. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் சக்ரவர்த்திக்கு கண்டிப்பா வாய்ப்பிருக்கு.. 2 காரணம் இதோ

Varun Chakravarthy
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயாராகி வருகிறது. அது போன்ற சூழ்நிலையில் சுழல் பந்து வீச்சு துறையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட பிரகாச வாய்ப்புள்ளது.

ஏனெனில் கடந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல முக்கிய பங்காற்றிய அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் அசத்திய வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அடுத்ததாக 2024 – 25 விஜய் ஹசாரே கோப்பையில் அவர் 6 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

உறுதியாக வாய்ப்பு:

அந்த வகையில் தற்சமயத்தில் வருண் சக்கரவர்த்தி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். மறுபுறம் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் முதன்மை ஸ்பின்னர்களாக தற்சமயத்தில் உள்ளார்கள். அதில் குல்தீப் யாதவ் தற்சமயத்தில் காயத்தால் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருக்கிறார்.

ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். எனவே இந்திய அணிக்கு ஒரு வலது கை ஸ்பின்னர் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்த இடத்தை தற்போது நல்ல பார்மில் இருக்கும் சக்ரவர்த்தி பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறார். அதன் காரணமாக விரைவில் துவங்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

கம்பீர் இருக்காரு:

அந்த தொடரில் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பில் மட்டும் கணிசமாக அசத்தி விட்டால் கூட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் கண்டிப்பாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் ஏற்கனவே டி20 அணிக்குள் கொண்டு வந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒருநாள் அணியிலும் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுப்பார்.

இதையும் படிங்க: ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது.. மாணவர்களுக்கு மத்தியில் அஸ்வின் பேச காரணம் என்ன?

கொல்கத்தா அணியில் ஆலோசகராக இருந்த போது அவருடைய திறமையை கம்பீர் நன்றாக பார்த்து உணர்ந்துள்ளார். அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அது நடைபெற்றால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement